முதல்வர் ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்பிய 2 பேர் கைது

Last Updated : Oct 12, 2016, 10:49 AM IST
முதல்வர் ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்பிய 2 பேர் கைது title=

முதல்வர் ஜெயலலிதா பற்றி வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை - போலீஸ்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் 22-ம் தேதி முதல் ஜெயலலிதாவுக்கு டாக்டர் கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தேவையில்லாத வதந்திகள் சிலபேரால் சமூக வலைதள ங்களில் பரப்பப்பட்டு வருகிறது . பேஸ்புக், வாட்ஸ்-அப் உள்ளிட்டவற்றில் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றிய வதந்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டே இருக்கின்றன.

இது போன்று வதந்தியை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் ஏற்கனவே எச்சரித்து இருந்தனர். ஆனாலும் முதல்வரின்ரின் உடல் நிலை பற்றிய வதந்தி அவ்வப்போது இணைய தளங்கள் மூலமாக பரப்பப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.

இதுபோன்ற வதந்திகளை இணையதளம் வாயிலாக பரப்புபவர்களை போலீசார் கண்டுபிடித்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி வதந்தி பரப்பிய சதீஷ்குமார் மற்றும் மாடசாமியை சென்னை போலீசார் தேடிக்கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் சென்னை போலீசார் இதைபோல வதந்தியை பரப்புபவர்களை தீவீரமாக விசாரணை நடத்தி வருகிறார்.

 

 

Trending News