சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. பல மாநிலங்களில் ஒற்றை நாள் தொற்றின் அளவு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.
தமிழகத்திலும் தொற்றின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டு இருக்கின்றது. தமிழகத்தில் தொற்றின் அளவு உயர்ந்துகொண்டே உள்ளது. உயிரிழப்போர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், அடுத்த 2 வாரங்களில் தொற்றின் அளவு உச்சத்தைத் தொடும் என அமெரிக்காவின் (America) சுகாதார மதிப்பீடு ஆய்வு நிறுவனமான ஐ.எச்.எம்.இ. எச்சரித்துள்ளது. மேலும் ஒரு நாள் இறப்பு எண்ணிக்கையும் 850 ஆக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொற்று பரவலைத் தடுப்பதற்கான வழிகளையும் இந்த ஆய்வு நிறுவனம் பட்டியலிட்டுள்ளது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொற்று பரவல் வேகத்தை கட்டுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர, தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனா தொற்றுக்கு (Coronavirus) ஆளாகும் நபர்களுக்கு மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டிய தேவை இருக்காது என்றும் ஐ.எச்.எம்.ஐ. தெரிவித்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்து அதிகரிப்பதால், தொற்றின் தீவிரம் அதிகமாக இருக்காது என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டுமே கொரோனா தொற்றின் தீவிரத்திலிருந்து மக்களை காக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்களின் ஒரு ஆய்விலும், மே மாதத்தில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் பன்மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றி விழிப்புணர்வுடன் இருந்து, அனைத்து வித வழிகாட்டுதலக்ளை கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியும்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு (Tamil Nadu Government) ஏற்கனவே மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அடிப்படை சேவைகள் தவிர அனைத்து வித நடமாட்டங்களுக்கும், கடைகளுக்கும், போக்குவரத்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன.
ALSO READ: கொரோனாவுக்கு மாட்டுச் சாணம் சிகிச்சை: இந்திய மருத்துவ சங்க தலைவர் எசரிக்கை!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR