சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொடர்ந்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தடுப்பூசி பற்றாக்குறை என்ற நிலையும் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டுக் கொள்ள தொடக்கத்தில் தயக்கம் இருந்தது. ஆனால், கோவிட் ஏற்படாமல் தடுக்க தடுப்பூசிகளே முக்கியமான பங்கை வகிப்பதால் இப்போது பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வருகின்ற்னர்.
இந்த நிலையில், தற்போது தடுப்பூசி பற்றாக்குறையால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியும், கோவிஷீல்டு தடுப்பூசியும் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை.
ALSO READ: 2021 இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி: மத்திய அரசு
உடனடியாக தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. தமிழக மக்கள் அனைவருக்கும் விரைவில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்யும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.
இதனையடுத்து இன்று 4 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு வந்து சேர்ந்தன. விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பூசி மருந்துகளை பெற்றுக் கொண்டனர்.
உடனடியாக தடுப்பூசிகள் அனைத்தும் சென்னை விமான நிலையத்தில் இருந்து குளிர்சாதன வாகனங்கள் மூலம் மத்திய மருத்துவ கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ள இடங்களுக்கு தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழ்க சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ALSO READ: Covishield மிகப் பெரிய செய்தி: 2 டோஸ்களுக்கான இடைவெளி 12-16 வாரங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR