#என்நிலம்என்உரிமை: 8 வழிச்சாலைக்கு எதிராக நடைபயணத்தை துவங்கிய சிபிஎம்

திருவண்ணாமலை முதல் சேலம் வரை எட்டுவழிச்சாலை திட்டத்தை கைவிடக்கோரி சிபிஎம் கட்சி தலைமையில் நடைப்பயணம் துவங்கியது.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 1, 2018, 08:45 PM IST
#என்நிலம்என்உரிமை: 8 வழிச்சாலைக்கு எதிராக நடைபயணத்தை துவங்கிய சிபிஎம் title=

சிபிஎம் கட்சி சார்பில் எட்டு வழி பசுமை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை முதல் சேலம் வரை நடைபயண துவக்க நிகழ்ச்சி கலை நிகழ்ச்சியுடன் இன்று துவங்கியது. இந்த நடை பயணத்தை துவக்கி வைத்தார் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்.

Image may contain: 3 people, people smiling, people standing and outdoor

என் நிலம் என் உரிமை என்ற கோஷத்தை முன்வைத்து விவசாயத்தையும் வாழ்க்கையை நாசமாக்கும் பசுமைவழிச் சாலை திட்டத்தை கைவிடக்கோரி திருவண்ணாமலை முதல் சேலம் வரை விவசாயிகள் நடைபயணம் சிபிஎம் கட்சியின் சார்பில் இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு சிபிஐஎம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாவது, நடை பயணத்தை சீர்குழைக்க திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கடும் நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை வழி நெடுக்கிலும் நிறுத்தி 8 வழி சாலை எதிர்ப்பு நடை பயணத்தை சீர்குலைக்கும் வகையில் தடுப்புகளை அமைத்து தடுத்து வருகின்றனர் .

அதனையும் மீறி சிபிஎம் கட்சியின் சார்பில் பிரம்மாண்டமாய் எழுச்சி மிகுந்த பாடல்களுடன் நிகழ்ச்சியை அண்ணா சிலை முன்பு சிபிஎம் கட்சியினர் நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் மாவட்ட விவசாய விளைநிலங்களை கிணறுகள் கண்மாய்கள் குளங்கள் போன்ற நீர் ஆதாரங்களை விளைநிலங்களை அழித்து ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 273.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு 8 வழிச்சாலை அமைக்க அரசு தயாராகி வருகிறது .

இத்திட்டம் மலைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விரைந்து சென்று சென்னை துறைமுகம் சேர எட்டு வழிச்சாலை அமைக்க அரசு முன் வந்துள்ளது.

விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலம் வீடு கிணறுகள் சொந்த நாட்டிலேயே அரசின் நிவாரண நிதிக்காக காத்திருக்கும் வாழ்க்கை முறையை 8 வழிச்சாலை அமைக்க அரசு முன் வந்துள்ளது. 8 வழிச்சாலை வளர்ச்சி ஏற்படும் என்பது பச்சை பொய் ஏமாற்று வேலை.

ஏற்கனவே உள்ள சாலைகளை சீர் படுத்த வேண்டும். 8 வழி சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் விவசாயிகளுக்கு விரோதமான 8 வழிச்சாலை குறித்துப் பேசினாலும் கூட்டம் நடத்தினால் கைது செய்யப்பட்டு வரும் நிலையை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த நடை பயணத்தில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டு மத்திய குழு, மாநில செயற்குழு, மாநில குழு உறுப்பினர்கள் உள்ளிட்டு எண்ணற்றோர் பங்கேற்றனர்.

Trending News