தொடரும் பின்னடைவு.. ஜாமீன் மனுவை நிராகரித்த டெல்லி ஐகோர்ட்

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு இடைக்கால ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Nov 1, 2019, 06:13 PM IST
தொடரும் பின்னடைவு.. ஜாமீன் மனுவை நிராகரித்த டெல்லி ஐகோர்ட்

புதுடில்லி: முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை அளிக்க ஜாமீன் வழங்க வேண்டும் என்று கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்தது. 

நீதிபதி சுரேஷ்குமார் கைட், "சிறை கண்காணிப்பாளருக்கு ப.சிதம்பரம் இருக்கும் சிறைபகுதி சுற்றி சுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், வீட்டு உணவு மற்றும் மினரல் வாட்டர் அவருக்கு வழங்க அனுமதிக்க வேண்டும், கொசுக்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள கொசு வலையை அனுமதி, ஒரு நாளைக்கு இரண்டு முறை அவரின் வசிப்பிடத்தை சுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார். மேலும் அவருக்கு முகமூடியும் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார் நீதிபதி.

மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.கே. கைட், "அவரது இரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நோயாளி என்ற அடிப்படையில் அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

நேற்று (வியாழக்கிழமை), முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரத்தின் குடும்ப மருத்துவர் டாக்டர் டி நாகேஷ்வர் ரெட்டி உள்ளிட்ட மருத்துவர்கள் குழுவை உடனடியாக அமைக்குமாறு அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) இயக்குநருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.