திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து; DMK சார்பில் MLA-க்கள் கூட்டம்....

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்....

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 7, 2019, 10:44 AM IST
திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து; DMK சார்பில் MLA-க்கள் கூட்டம்.... title=

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 6 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்....

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவையடுத்து, அவரது எம்எல்ஏ தொகுதியான திருவாரூருக்கு வரும் 28 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அங்கு கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருவதால், தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வலியுறுத்தினர். இதுதொடர்பாக தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான நிர்மல் ராஜ், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அண்மையில் அறிக்கை அனுப்பியிருந்தார்.

இந்த தொடர்ந்து இன்று, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. 

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. 

கடந்த வாரம் திருவாரூர் இடை தேர்தலுக்கு திமுக வேட்பாளராக பூண்டி கலைவாணன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என திமுக அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது! 

 

Trending News