என்னயா பண்ணி வச்சு இருக்கீங்க! போக்குவரத்து மாற்றத்தால் திணறும் சென்னை வாசிகள்!

சென்னையில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் பல்வேறு சாலைகள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.     

Written by - RK Spark | Last Updated : Jul 10, 2022, 08:45 AM IST
  • சென்னையில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம்.
  • மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் காவல்துறை மாற்றம் செய்துள்ளது.
  • பல முக்கிய சாலைகள் வேறு வழிகளில் மாற்றம்.
என்னயா பண்ணி வச்சு இருக்கீங்க! போக்குவரத்து மாற்றத்தால் திணறும் சென்னை வாசிகள்! title=

மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகள் தற்போது பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் நேற்று முதல் சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் உள்ள ஈவேரா சாலையில் இன்று முதல் சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் வளைவில் இடது புறமாக திரும்பி,  அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் அண்ணா வளைவில் வலது புறம் திரும்பி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

koyambedu

மேலும் படிக்க | மூன்று தடவை கருக்கலைப்பு ? - பின்வாங்கிய நடிகை சாந்தினி !

அண்ணாஆர்ச் வளைவில் இடது புறமாக திருப்பி விடப்படும் வாகனங்கள்,  ஈவேரா சாலை மூலமாக அமைந்தகரையை சென்று அடையலாம். அமைந்தகரையில் இருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வாகனங்கள் அண்ணா ஆர்ச் சந்திப்பில் எந்த போக்குவரத்து தடையும் இன்றி செல்லலாம் என்று போக்குவரத்து காவல்துறை தனது செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் வடபழனி சந்திப்பில் இருந்து அசோக் பில்லர் வரை இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . 100 அடி சாலை இரண்டாவது நிழற்சாலை சந்திப்பில் இருந்து நான்காவது  நிழற்சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளது.  

vp

அசோக் பில்லர் வழியாக வடபழனி கோயம்பேடு கே.கே. நகர் செல்லும் வாகனங்கள் வழக்கம் போல செல்லலாம்.  அசோக் பில்லர் வழியாக தியாகராய நகர் கோடம்பாக்கம் செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் சாலை வழியாக செல்லலாம். வடபழனியில் இருந்து இரண்டாவது  நிழற்சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி நான்காவது  நிழற்சாலை வழியாக தியாகராய நகர் செல்லலாம். சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை கிண்டி மார்க்கம் வழியாகவும்,  விமான நிலையம் முதல் சென்ட்ரல் நிலையம் வரை கோயம்பேடு மார்க்கம் வழியாகவும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.  மெட்ரோ ரயில் இயக்குவதற்கான கட்டுமான பணிகள் வளசரவாக்கம் , போரூர் ,  வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு அமலுக்கு வருகிறது.

மேலும் படிக்க | தைரியமா? விடியலுக்கா? - பதிவு போட்ட சவுதாமணியின் கைதும் முழு பின்னணியும் !

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News