சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி 2

Last Updated : Feb 11, 2017, 11:43 AM IST
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி 2 title=

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில், 2 பேர் உயிரிழந்தனர்.

சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான பட்டாசு, தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இன்று காலையில் ஏழாயிரம்பண்ணையில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் சில அறைகள் தரைமட்டமாகின. 

வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு தீயை அணைக்க கடுமையாக போராடினர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிலரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Trending News