மக்கள் பற்றி அரசுக்கு அக்கறை இல்லை: ஸ்டாலின்

Last Updated : Sep 16, 2017, 08:38 AM IST
மக்கள் பற்றி அரசுக்கு அக்கறை இல்லை: ஸ்டாலின் title=

திண்டுக்கல்லில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதற்காக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு சென்றார்.

அதற்க்கு முன்பு அவர், நிருபர்களிடம் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி ஆட்சி, சட்டத்தை மதிக்காத ஆட்சி. சட்டத்தை மதிக்கும் அரசு ஊழியர்களை மதிக்கிறேன், பாராட்டுகிறேன். முறையாக நோட்டீஸ் கொடுத்து போராட்டம் நடத்துகிறார்கள்.

போராட்டம் நடத்துபவர்களை முதல்வரோ, துறை அமைச்சர்களோ அல்லது தலைமை செயலாளரோ அழைத்து பேசி சுமுக முடிவு எடுத்து இருக்க வேண்டும். அதை விடுத்து மிரட்டல் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்கள்.

எத்தனை கோடிகள் கொடுத்து எம்.எல்.ஏ.க்களை வாங்கலாம் என்பதில் தான் இந்த அரசு தீவிரமாக உள்ளது. மக்களை பற்றியோ, போராட்டம் நடத்தும் ஜாக்டோ-ஜியோவினரை பற்றியோ அவர்களுக்கு கவலை இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News