குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்: ஹெச்.ராஜா

நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள் தான் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jan 19, 2020, 04:54 PM IST
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்: ஹெச்.ராஜா
Representational Image(PTI)

நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள் தான் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் யாருக்கும் பயப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் தரிசனம் செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, பெரியார் குறித்த ரஜினிகாந்த் கூறிய கருத்து ஆதரவு தெரிவித்த ஹெச்.ராஜா, திராவிடர் கழகத்தினரின் மிரட்டல்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கவலைப்பட தேவையில்லை. காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? ரஜினி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. மேலோட்டமாக குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை வைத்து மிரட்ட நினைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறினார். 

முன்னதாக் நாட்டில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேசுவோர் அனைவரும் தேசவிரோத சக்திகள் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ்டிபிஐ கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் எதிராக பேசிய நெல்லைக்கண்ணனின் டெல்லி தலைமை பீடத்தில் இருக்கும் தொடர்புகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.