திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது என காவேரி மருத்துவமனை அறிக்கை!
வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்கானிப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜூலை 27-ஆம் நாள் இரவு அவருக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.
ரத்த அழுத்தம் காரணமாக காவிரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கருணாநிதியின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரபரப்பட்டு வந்தது. இதனால், காவேரி மருத்துவமனை தினமும் அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் காவிரி மருத்துவனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், காவிரி மருத்துவமனை திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராகி வருகிறது. அவருடைய வயதின் காரணமாகவும் உடல்நிலை காரணமாகவும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி இருக்கிறது. தற்போது இவரின் உடல் உறுப்புகள் சீராக இயங்கி வருகிறது காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
An extended period of hospitalization will be necessary due to age related overall decline in Karunanidhi's general health, altered liver functions & haematological parameters. He continues to maintain his vital signs with active medical support: Kauvery Hospital, Chennai pic.twitter.com/1918264dUh
— ANI (@ANI) July 31, 2018