தமிழகம், புதுவையில் மேலடுக்கு சுழற்சியால் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 8% அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!! 

Last Updated : Dec 1, 2019, 01:20 PM IST
    1. தமிழகம், புதுவையில் மேலடுக்கு சுழற்சியால் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
    2. சென்னை, புறநகர் பகுதியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்; சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
    3. குமரிக் கடல், மாலத்தீவு, லட்சத் தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் இன்று செல்ல வேண்டாம்.
    4. சென்னை, காஞ்சிபுரம், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
தமிழகம், புதுவையில் மேலடுக்கு சுழற்சியால் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!

வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 8% அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!! 

வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 8% அதிகமாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்; தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. லட்சத்தீவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியில் சுறாவளிக்காற்று வீச வாய்ப்பு; எனவே லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவிக்கபட்டுள்ளது. 

மேலும், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், அதிக கனமழையும், சென்னை ,காஞ்சிபுரம், விழுப்புரம், நீலகிரி, திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 14 இடங்களில் மிக கனமழையும், 53 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. அக்.,1 முதல் இன்று வரை இயல்பை விட 3 செ.மீ., மழை அதிகமாக பதிவாகியுள்ளது. சூறைக்காற்று வீசுவதால் இன்று குமரி, லட்சத்தீவு, மாலத்தீவு கடல்பகுதிகளுக்கும், நாளை லட்சத்தீவு பகுதிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இந்த மழை 5, 6 நாட்களுக்குள் குறையும், பின்னர் 10 ஆம் தேதிக்கு பின் மழை அதிகரிக்கும். இவ்வாறு புவியரசன் கூறினார்.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், போர்க்கால அடிப்படையில், மாவட்ட நிர்வாகங்கள் செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக, தமது முகநூர் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர், சாலைகளில் வெள்ளமெனத் தேங்கி இருக்கும் மழைநீர், பல ஊர்களில் வீடுகளுக்குள் உட் புகுந்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

 

More Stories

Trending News