தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க், எம்.பி.ஏ, எம்சிஏ போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளில் அரசு இட ஒதுக்கீட்டில் சேர, டான்செட் தேர்ச்சி பெறவேண்டும்.
தமிழகத்தில் வருகிற 14 ஆம் தேதி டான்செட் (TANCET) தேர்வு தொடங்கவுள்ளது. மே 14 மற்றும் 15ஆம் தேதிகளில் நடைபெறும் முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான தமிழ்நாடு பொதுநுழைவுத் தேர்வான டான்செட் தேர்வுக்கு 36,710 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 2022-23 ஆண்டுக்கான எம்பிஏ, எம்சிஏ போன்ற படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 14ஆம் தேதி நடக்கவுள்ளது. எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்.பிளான் முதுநிலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான 'டான்செட்' மே 15ஆம் தேதி நடக்கவுள்ளது.
மேலும் படிக்க | TANCET தேர்விற்கு வரும் மே 8-ஆம் நாள் முதல் விண்ணப்பிக்கலாம்...
இந்நிலையில் தமிழ்நாட்டில் அனைத்துக் கல்லூரிகளுக்கும் நாளை மறுநாள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான டான்செட் தேர்வை எழுத ஏதுவாக இந்த விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR