ஐபிசிசியின் காலநிலை மாற்றம் மீதான அறிக்கை, புவி வெப்பமடைதல் கட்டுப்பாட்டை மீறிச் செல்வது மிகவும் அபாயகரமானது என்றும், இந்தியா உட்பட உலகம் முழுவதும் கடல் மட்டம் உயரக்கூடும் என்றும் கூறியுள்ளது. இதன் விளைவாக, பூமியின் பல கடலோரப் பகுதிகள் மூழ்குவதற்கு வழிவகுக்கும் என எச்சரித்துள்ளது.
IPCC என்றால் என்ன?
ஐபிசிசியின் முழு வடிவம் காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையிலான குழு (IPCC is Intergovernmental Panel on Climate Change)ஆகும். ஐநா-வை சேர்ந்த இக்குழு மனிதனின் தவறுகளால் ஏற்படும் காலநிலை மாற்றம், இதனால் இயற்கையாகவும், அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஏற்படும் ஆபத்து மற்றும் ஆபத்து தொடர்பான தகவல்களை வழங்குகிறது.
IPCC தாக்கல் செய்துள்ள அறிக்கையின் படி, வரவிருக்கும் ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தினால் இந்தியாவின் பல முக்கிய நகரங்கள் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதை இங்கே காணலாம்:
மும்பை
இந்தியாவின் பொருளாதார தலைநகரமாக விளங்கும், மும்பை புவி வெப்பமடைதலால் மிகவும் பாதிக்கப்படும் கடலோரப் பகுதிகளில் ஒன்றாகும். இந்தியா டைம்ஸில் வெளியான அறிக்கையில், வரவிருக்கும் காலங்களில், மும்பையின் கிட்டத்தட்ட 65 சதவிகித பகுதிகள் நீரில் மூழ்கும் என கூறப்பட்டுள்ளது. நீரில் மூழ்கும் அபாயத்தில் இருக்கும் பகுதிகள் கொலாபா, பாந்த்ரா மற்றும் மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள பெரும்பாலான புறநகர்ப் பகுதிகள் ஆகியவை.
கோவா
சுற்றுலாவிற்கு புகழ்பெற்ற கடலோர மாநிலமான கோவாவிற்கு பேராபத்து உள்ளது. 2050 வாக்கில் அங்கே கடல் மட்டம் கணிசமாக உயரும் எனவும், மாபுசா, சோராவ் தீவு, முல்காவ், கோர்லிம், டோங்ரிம் போன்ற பகுதிகள் அதிகம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இருப்பினும், தெற்கு கோவாவில் உள்ள பெரும்பாலான பகுதிகளுக்கு பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது.
கொல்கத்தா
கொல்கத்தா கடல் மட்டம் அதிகரிப்பதால் அதிகம் பாதிக்கப்படும் என்றும் மேற்கு வங்கத்தின் தலைநகரான பாராநகர், ராஜ்பூர் சோனார்பூர் மற்றும் ஹவுராவைச் சுற்றியுள்ள பகுதிகளான சாந்த்ராகாச்சி, பாலிடிகுரி ஆகியவை நீரில் மூழ்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
சென்னை
தமிழகத்தின் பல கடலோர பகுதிகளான சிதம்பரம், மகாபலிபுரம், கல்பாக்கம், மரக்காணம், திருப்போரூர், வேளச்சேரி ஆகியவை கடல் மட்டம் அதிகரிப்பதால் மூழ்கும் அபாயம் உள்ளது. மாநில தலைநகரான சென்னையின் கிட்டத்தட்ட 45 சதவிகிதம் கடலுக்குள் மூழ்கும் என கூறப்படுகிறது. சென்னையின் வடக்குப் பகுதிகளான எண்ணூர், மீஞ்சூர் மற்றும் புலிகாடு போன்றவை பாதிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.