கோவை: ஈஷாவில் மிக பிரமாண்டமாக நடக்கும் மஹாசிவராத்திரி விழா இந்தாண்டு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட உள்ளது. அரசின் வழிகாட்டுதல்படி, அதிகப்படியான மக்கள் கூடுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, முன்பதிவு செய்த மிக குறைவான எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே இந்தாண்டு விழாவில் நேரில் பங்கேற்க முடியும். மேலும், அவர்கள் கோவிட் பரிசோதனை மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கி உள்ளோம்.
மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காகவும், பங்கேற்பாளர்கள் ஆழ்ந்த தியான அனுபவத்தை பெறுவதற்காகவும் நேரில் பங்கேற்பவர்களுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
In our efforts to control the size of the audience at the #Mahashivratri grounds, the celebrations this year will be ticketed and will largely be a meditative event. Book your seats in any category for an immersive spiritual experience.
To register, visit: https://t.co/bn6VNyTJt8 pic.twitter.com/zOSWy7C2pP— Isha Foundation (@ishafoundation) March 6, 2021
மற்றவர்கள் அனைவரும் தொலைகாட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் மூலம் இலவசமாக கலந்துகொள்ளலாம்.
Also Read | ஈஷா மஹாசிவராத்திரி விழாவை தடை செய்ய கோரிய வழக்கை நிராகரித்தது NGT..!!!
மஹாசிவராத்திரி விழாவையொட்டி, ஆதியோகி மற்றும் தியானலிங்கம் மார்ச் 8-ம் தேதி முதல் மார்ச் 11-ம் தேதி வரை தற்காலிகமாக மூடப்பட்டு இருக்கும். ஆகவே, பொதுமக்கள் அந்த நாட்களில் ஈஷாவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மார்ச் 12-ம் தேதி காலை 10.30 மணி முதல் ஆதியோகிக்கு பொதுமக்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள்.
ALSO READ | உலகத்தையே ஒரு குடும்பமாக நினைத்து தீபாவளியை கொண்டாடுங்கள்: சத்குரு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR