சென்னை HC-ன் 49ஆவது தலைமை நீதிபதியாக AP.சாஹி பதவியேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக AP.சாஹி பதவியேற்றார்..!

Last Updated : Nov 11, 2019, 12:20 PM IST
சென்னை HC-ன் 49ஆவது தலைமை நீதிபதியாக AP.சாஹி பதவியேற்பு! title=

சென்னை உயர்நீதிமன்றத்தின் 49ஆவது தலைமை நீதிபதியாக AP.சாஹி பதவியேற்றார்..!

சென்னை: ராஜ் பவனில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி ஆளுநர் பன்வர்லிலால் புரோஹித் முன்னிலையில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேறு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புதிய தலைமை நீதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால், தலைமை செயலாளர் சண்முகம், அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், உயர் அதிகாரிகள் கல ந்துக்கொண்டனர்.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹிலராமாணீ, மேகாலயா உயா்நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதனையடுத்து தஹிலராமாணீ, தனது பதவியை ராஜினாமா செய்தாா். இதனைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்ற மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், பாட்னா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமரேஷ்வா் பிரதாப் சாஹியை சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்தது. இந்தப் பரிந்துரையை ஏற்று ஏ.பி.சாஹியை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்து கடந்த அக்டோபா் 30ம் தேதி குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தாா்.

இதனைத்தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி இன்று பதவியேற்றார். சென்னை உயர் நீதிமன்றம் 1862ல் உருவாக்கப்பட்டதிலிருந்து 49வது தலைமை நீதிபதியாகவும், சுதந்திர இந்தியாவின் 30வது தலைமை நீபதியாகவும் ஏ.பி சாஹி பதவி ஏற்று கொண்டார்.

 

Trending News