தமிழக சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார் கு.பிச்சாண்டி

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். முதலமைச்சரும், பிற அமைச்சர்களும் ஓரு சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : May 10, 2021, 12:29 PM IST
  • தமிழக சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார் கு.பிச்சாண்டி
  • தமிழக சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார் கு.பிச்சாண்டி
  • சட்டமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்
தமிழக சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக்கொண்டார் கு.பிச்சாண்டி title=

சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். முதலமைச்சரும், பிற அமைச்சர்களும் ஓரு சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்றனர்.

அதன் தொடர்ச்சியாக, இன்று தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்றுக்கொண்டார்.

தற்காலிக சபாநாயகர் கு.பிச்சாண்டிக்கு ஆளுநர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். ராஜ்பவனில் நடைபெர்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர்.

Also Read | தனது முதல் டிவிட்டர் பதிவில் தமிழக முதலமைச்சரை வாழ்த்திய இயக்குநர் பாலா! 

தற்காலிக சபாநாயகராக பதவியேற்றுக் கொண்ட கு. பிச்சாண்டிக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என பலரும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

நாளை சட்டப்பேரவை கூடும்போது, சட்டமன்றத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நாளை காலை தொடங்குகிறது. கொரோனா பரவல் அச்சம் தொடர்வதால், தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும்  கலைவாணர் அரங்கத்தில் செய்யப்பட்டுள்ளன. நாளை கூடும் சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தில் புதிய எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

Also Read | Apologize PM Modi என்ற கோஷத்தை முன்னெடுக்கும் ஓவைசி

எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பதற்காக தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டுவசதித்துறை அமைச்சராக கு.பிச்சாண்டி பதவி வகித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார் கு.பிச்சாண்டி. சட்டப்பேரவை நிகழ்வுகளில் நீண்ட கால அனுபவம் உடையவர்.

சபாநாயகராகும் அனைத்து தகுதிகளும் கொண்டவர் பிச்சாண்டி என்பதால், சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படும்  வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. துணை சபாநாயகர் தேர்வும் நாளை மறுநாளே நடைபெறவுள்ளது.  

Also Read | ஆவின் பால் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது ஏன்?

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News