கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல, ஆன்டி மனித குலம்: ஹெச். ராஜா சர்ச்சை

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கமல்ஹாசன் மனித குலத்திற்கே எதிரானவர் எனப் பேசி சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 15, 2019, 03:11 PM IST
கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல, ஆன்டி மனித குலம்: ஹெச். ராஜா சர்ச்சை title=

கொடைக்கானல்: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனக் கூறிய கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

கடந்த 12 ஆம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" எனப் பிரச்சாரம் செய்தார்.

இதைத்தொடர்ந்து கமலின் கருத்திற்கு பாஜக மற்றும் இந்து அமைப்பு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கமல்ஹாசனை விமர்சித்து வருகிறார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கூறி வருகிறார்.

இந்தநிலையில், இன்று கொடைக்கானல் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கமல்ஹாசன் மனித குலத்திற்கே எதிரானவர் எனப் பேசி சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளார். அவர் கூறியது, கமல்ஹாசன் ஆன்டி இந்தியன் அல்ல. அவர் ஆன்டி மனிதகுலம். இந்து மதத்தை பற்றி தவறாக பேசிய கமல்ஹாசன் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்க வில்லை என்றால் அவருக்கு கடும் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறினார்.

Trending News