டெல்லி: காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்துக்கு 9.2 டி.எம்.சி. தண்ணீரை ஜுன் மாத இறுதிக்குள் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவு.
டெல்லியில் மத்திய நீர்வள ஆணைய அலுவலகத்தில் முதல் முறையாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், ஆணைய தலைவர் மசூத் உசைன் தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அப்பொழுது தமிழ்நாடு பிரதிநிதிகள் சார்பாக, காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவை மீறி வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நீரை திறந்து விடவில்லை. எனவே மே மாதத்திற்குள் வழங்க வேண்டிய 2 டிஎம்சி நீரை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் ஜுன் மாதம் திறக்க வேண்டிய 9.19 டிஎன்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும் தமிழ்நாடு சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 9.2 டி.எம்.சி. தண்ணீரை ஜுன் மாத இறுதிக்குள் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.