காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு, ட்விட்டர் பக்கத்தினில் தனது பெயரினை மாற்றியுள்ளார்!
காங்கிரஸ் கட்சியில் செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு தனது கருத்துக்களை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்து வருகின்றார்.
ட்விட்டர் பக்கத்தில் சுமார் 1.15M பின்தொடர்பாளர்களை கொண்டுள்ள குஷ்பு அவர்கள் khushbusundar என பெயர் கொண்ட ட்விட்டர் கணக்கினை இதுநாள் வரை கையாண்டு வந்தார்.
தான் முஸ்லீம் என்னும் அடையாளத்தினை மறைக்கின்றார் என பாஜக தரப்பில் விமர்சனம் வைக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் தனது ட்விட்டர் கணக்கின் பெயரினை "khushbusundar..and it's Nakhat Khan for the BJP" என மாற்றியுள்ளார்.
கோலிவுட் திரையுலகில் கொடிகட்டி பறந்த இவர் தற்போது அரசியலிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றார். இந்த பெயர் பிரச்சணை குறித்து அவர் தெரிவிக்கையில்.. அரசு பதிவேட்டில் அவரது பெயர் Khushbu alias Nakhat Khan எனவே பதியப்பட்டுள்ளதாகவும், இயக்குனர் சுந்தர் C உடன் திருமணம் முடித்தப் பின்னரே அவரது பெயர் Khushbu Sundar என அவரது கணவர் பெயரினையும் இணைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக தன்னை அனைவரும் குஷ்பு என்றே அழைத்து வருகின்றனர். திரைத்துறையில் தான் முதலில் வருகையில் Nakhat என்பதற்கான அர்தத்தினை அறிந்துக்கொள்ள பிறருக்கு சற்று கடினமாகவே இருந்தது, அதனாலே தன் பெயரினை குஷ்பு என மாற்றிக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.