நடிகர் கமலஹாசன் தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக உள்ளது என்று பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தடைவிதிப்பதுடன், கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதனால் என்னை கைது செய்தால் செய்யட்டும், சட்டம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கமலஹாசன் கூறியிருந்தார்.
கமலஹாசன் கருத்து குறித்து அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியது:-
நடிகர் கமலஹாசன் பணத்துக்காகவும், ஆதாயத்துக்காகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தி பேசி வருகிறார்.
சினிமாவில் வாய்ப்பு பறிபோனதால் தற்போது 3-ம் தர நடிகராக பேசி வருகிறார். பெண்களை பற்றி பேச கமலுக்கு தகுதி இல்லை. காசு பணத்துக்காக எதையும் அவர் செய்வார்.
மேலும் கமலஹாசன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.