சென்னை: தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று நேற்று காலை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதியில் நிலைகொண்டது. இது இன்று காலை கரையை கடந்தது.
வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்த மாவட்டங்களைத் தவிர கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி மாவட்டங்களிலும், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.