பேஸ்புக் மூலம் காதல் திருமணம்! தடையில்லா சான்று தேவையா? மணப்பெண் மனு

பேஸ்புக் மூலம் காதல் திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு பெண் தமிழகத்தில் தங்குவதற்கு தடையில்லா சான்று தேவை! திருமணப் பதிவு அலுவலத்தில் திருமணப் பதிவுக்கு மறுப்பு

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Feb 21, 2022, 06:52 PM IST
  • காதலில் கனிந்த முகநூல் நட்பு
  • திருமணத்தில் முடிந்த காதல்
  • திருமணத்தை பதிவு செய்ய தடையில்லா சான்றிதழ் தேவை
பேஸ்புக் மூலம் காதல் திருமணம்! தடையில்லா சான்று தேவையா? மணப்பெண் மனு title=

சமூக ஊடகங்கள் மூலம் காதலிப்பதும், திருமணம் செய்துக் கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது. காதலுக்கு தூது போவது இந்தக் காலத்தில் சமூக ஊடகங்கள் தான் என்ற நிலையில், பல திருமணங்கள் பேஸ்புக் மூலம் நடைபெறுகிறது.  

பேஸ்புக் மூலம் காதல் திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டை சேர்ந்த பெண் தமிழகத்தில் தங்குவதற்கு தடையில்லா சான்று கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்

இலங்கை நாட்டில் உள்ள பருத்தித்துறை தும்பளை தெற்கு பகுதியை சேர்ந்தவர் நிஷாந்தினி.  தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டம் பஞ்சு காளிப்பட்டி சேர்ந்தவர் சரவணன்.

நிஷாந்தினியும், சரவணனும் பேஸ்புக் மூலம் அறிமுகமாகி, கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

மேலும் படிக்க | காதலர் தினத்தில் திருமணம் செய்துக்கொண்ட திருநம்பியும் - திருநங்கையும்

இருவரின் காதலுக்கும் இரு வீட்டாரின் ஒப்புதலும் கிடைத்தது. இரு வீட்டார் சம்மதத்துடன் ஓமலூர் அருகே உள்ள பஞ்சு காளிப்பட்டி பெருமாள் கோவிலில், நிஷாந்தினிக்கும் சரவணனுக்கும் கடந்த 7ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. 

இந்த நிலையில் திருமணத்தை பதிவு செய்வதற்காக பதிவு துறை அலுவலகத்திற்கு மணமக்கள் சென்றனர். 

ஆனால், இலங்கையைச் சேர்ந்த நிஷாந்தினிக்கு தடையில்லா சான்று இருந்தால் மட்டுமே பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் கூறிவிட்டதால், திருமணத்தைப் பதிவு செய்ய முடியவில்லை.

எனவே, தடையில்லா சான்று பெற்று தர ஆவணம் செய்ய வேண்டுமென, தனது குடும்பத்துடன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிஷாந்தினி மனு அளித்துள்ளார்.

மேலும் படிக்க | பேயை கல்யாணம் செய்யும் பாடகி! திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News