சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் மூடல்!

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

Last Updated : Oct 8, 2019, 10:51 AM IST
சீன அதிபர் வருகையையொட்டி மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் மூடல்! title=

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரும் 12, 13-ஆம் தேதிகளில் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது அவர்கள் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகளான அர்சுனன் தபசு, பட்டர்பால், கடற்கரை கோயில், ஐந்துரதம் ஆகியவற்றை சுற்றிப் பார்வையிடுகின்றனர்.

இதையடுத்து மாமல்லபுரத்தை அழகுப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைப்பெற்று வருகின்றன. மரக்கன்றுகள், புல்வெளிகள் அமைக்கப்படுகின்றன. அங்குள்ள சிலைகளுக்கு வர்ணம் பூசப்படுகின்றன. மேலும் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக  காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனையடுத்து ஐந்துரதம், கடற்கரை கோயில், அர்ஜூனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் மோடி -ஜி ஜின்பிங் பார்வையிடும் புராதன சின்னங்கள் உள்ள பகுதிகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன. 

சீன அதிபரை வரவேற்கும் வகையில், இந்தியா - சீனா கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையிலான ஓவியங்கள் விமானநிலைய சுவர்களில் வரையப்பட்டுள்ளன. ஒரு கப்பலில் யானையும் டிராகனும் பயணம் செய்வது போலவும், பிரதமர் மோடி மகாபலிபுரம் கடலை பார்த்து நின்று கொண்டிருப்பதைப் போலவும், புத்தரின் ஒவியங்கள் என சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓவியம் தீட்டப்பட்டுள்ளன.

இதனோடு, விமானநிலைய நுழைவு வாயில் முன்பு புதிய செயற்கை பூங்கா உருவாக்கப்பட்டு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்வதற்கு 5 மற்றும் 6-வது நுழைவு வாயில் பயன்படுத்தப்படும் என்பதால் அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. 

கடற்கரை கோவிலுக்குச் செல்லும் வழியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் கடைகளை மறைக்கும் வகையில் தற்காலிக சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன. வண்ண விளக்குகள், பளபளவென சாலைகள் பசுமை போர்த்திய புல்தரைகள் என மாமல்லபுரம் பசுமை நகரமாகவே மாற்றப்பட்டுள்ளது. பாதுகாப்பு என்ற பெயரில் பல கெடுபிடிகள் இருந்தாலும், இங்கு நடைபெறும் தூய்மைப் பணிகளை அங்குள்ள வியாபாரிகளும், பொதுமக்களும் வரவேற்றுள்ளனர்.

Trending News