சர்ச்சையாகும் மன்மோகன் சிங் 'இறுதிச் சடங்கு இடம்' - ராகுல், ஸ்டாலின் கண்டனம்

Manmohan Singh Last Rites: மன்மோகன் சிங் இறுதிச் சடங்கிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தின் மூலம் அவரை மத்திய பாஜக அரசு அவமதித்திருப்பதாக ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக சாடி உள்ளனர்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 28, 2024, 08:54 PM IST
  • மன்மோகன் சிங் இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற்றது.
  • மன்மோகன் சிங்கிற்கு தனி நினைவிடம் அமைக்க கோரிக்கை
  • டெல்லியின் நிகம்போத் காட் பகுதியில் அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது.
சர்ச்சையாகும் மன்மோகன் சிங் 'இறுதிச் சடங்கு இடம்' - ராகுல், ஸ்டாலின் கண்டனம் title=

Manmohan Singh Last Rites Latest Updates: மூத்த அரசியல்வாதி மற்றும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (92) கடந்த டிச.26ஆம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். இன்று மாலை டெல்லி நிகம்போத் காட் பகுதியில் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை உடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

இந்நிலையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு மன்மோகன் இறுதிச் சடங்கிற்கு (Manmohan Singh Last Rites) ஒதுக்கிய இடம் குறித்து காங்கிரஸ், திமுக,  சிராண்மணி அகாலி தளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை முன்வைத்துள்ளன. குறிப்பாக, பாஜக இந்த இடத்தை இறுதிச் சடங்கிற்கு ஒதுக்கியதன் மூலம் மன்மோகன் சிங்கை அவமதித்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகீரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார்.

கடுமையாக சாடிய ராகுல் காந்தி 

ராகுல் காந்தி (Rahul Gandhi) இன்று அவரது X பக்கத்தில்,"பாரத மாதாவின் மகத்தான மகனும், சீக்கிய சமூகத்தின் முதல் பிரதமருமான டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் இறுதிச் சடங்குகள் நிகம்போத் காட் பகுதியில் இன்று நிகழ்த்தப்பட்டதன் மூலம் தற்போதைய அரசாங்கம் அவரை முற்றிலும் அவமதிப்பு செய்துள்ளது. அவர் 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்தவர். அவரது பதவிக்காலத்தில் நாடு பொருளாதார வல்லரசாக மாறியது. அவரது கொள்கைகள் இன்றளவும் நாட்டின் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை ஆதரிக்கின்றன.

மேலும் படிக்க | மன்மோகன் சிங் நீல நிற டர்பன்... கடைசி வரை கலர் மாற்றாதது ஏன்? அவரே சொன்ன பதில்!

இன்றுவரை அனைத்து முன்னாள் பிரதமர்களின் கண்ணியத்தையும் மதித்து, அவர்களின் இறுதிச் சடங்குகள் அங்கீகரிக்கப்பட்ட இடுகாடுகளில் செய்யப்பட்டது, இதனால் ஒவ்வொரு நபரும் எந்த சிரமமும் இல்லாமல் அஞ்சலி செலுத்தினர். மன்மோகன் சிங் எங்கள் உயரிய மரியாதை மற்றும் தனி நினைவுச்சின்னத்திற்கும் தகுதியானவர். இந்த நாட்டின் மகத்தான மகனுக்கும் அவரது பெருமைமிக்க சமூகத்திற்கும் அரசாங்கம் மரியாதை அளித்திருக்க வேண்டும்" என இந்தியில் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மேலும், தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினும் (MK Stalin) இந்த விவகாரத்தில் மத்திய பாஜக அரசை கடுமையாக சாடியுள்ளது. இன்று அவர் தனது X பக்கத்தில்,"டாக்டர் மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு பொருத்தமான இடத்தில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான உரிமையை அவரது குடும்பத்தினருக்கு மறுப்பு தெரிவிக்கும் பாஜக அரசின் முடிவு, அவரது உயர்ந்த மரபு மற்றும் சீக்கிய சமூகத்தை நேரடியாக அவமதிப்பதாகும். 

அவரின் குடும்பத்தினர் வைத்த கோரிக்கையை நிராகரித்து, இரண்டு முறை பிரதமராக இருந்தவரின் இறுதிச் சடங்கை, நிகம்போத் காட் பகுதியில் நடத்தியது என்பது ஆணவம், பாரபட்சம் மற்றும் அவரது மகத்தான பங்களிப்பை பொதுமக்களின் நினைவில் இருந்து அழிப்பதற்கான திட்டமிட்ட முயற்சி.

டாக்டர் மன்மோகன் சிங்கின் தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியது, லட்சக்கணக்கானவர்களை வறுமையில் இருந்து மீட்டது. ஒரு அரசியல்வாதியை அவமரியாதை செய்வது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதாகும். தலைசிறந்த தலைவர்களை இழிவுபடுத்திய கறை வரலாற்றில் இருந்து மறையாது" என்றும் கடுமையாக சாடி உள்ளார். நிகம்போத் காட் பகுதி என்பது டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் உள்ள மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய தகன மைதானம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

பாஜக பதில்

ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில்,"இந்திய அரசியலில் இது ஒரு புதிய தரம் தாழ்ந்த பேச்சு, அதற்கு காங்கிரஸ் கட்சிக்கு நன்றி. காங்கிரஸ் செய்யும் அரசியல், குறிப்பாக ராகுல் காந்தி மன்மோகன் சிங் தகனம் குறித்து ட்வீட் செய்திருப்பது வெட்கக்கேடானது. 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்குப் பிறகு நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், நிகம்போத் காட் பகுதியில் தனி நினைவிடம் கட்ட வேண்டும் என்று அமைச்சரவை முடிவெடுத்தது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும், டாக்டர் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினருக்கும் அமைச்சரவை கடிதம் எழுதியது. மன்மோகன் சிங்கின் நேர்மறையான செயல்களுக்காக நாடும் உலகமும் அவரையும் நினைவில் கொள்ளும் வகையில் நினைவிடம் அமைக்கப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் படிக்க |  Manmohan Singh | உலக நாடுகளை வியக்க வைத்த சிங்! இந்தியாவுக்காக அவர் செய்த சாதனை பட்டியல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News