மீனாட்சி அம்மன் கோவில் பசுபதீஸ்வரர் சன்னதி மேற்கூரை இடிந்தது!

தீ விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை இடிந்தது.

Last Updated : Feb 7, 2018, 08:21 AM IST
மீனாட்சி அம்மன் கோவில் பசுபதீஸ்வரர் சன்னதி மேற்கூரை இடிந்தது! title=

தீ விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை இடிந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ம் தேதி இரவு 11:30 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த 30-ம் மேற்பட்ட கடைகள் தீயினால் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் மணிக்கணக்கில் போராடி தீயை அணைத்தனர். 

இந்நிலையில் தீ விபத்து ஏற்பட்ட பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை நேற்று இரவு இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Trending News