சென்னை வண்ணாரப்பேட்டையில் நான்காவது நாளாக குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்திலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 13 ஆம் தேதி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், வருகிற 28 ஆம் தேதி வரை சென்னை நகரில் போலீசாரின் அனுமதி இன்றி ஊர்வலம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங் களை நடத்தக்கூடாது என்று கூறப்பட்டு இருந்தது. ஆனால், போலீசாரின் உத்தரவை மீறி சென்னை வண்ணாரப்பேட்டையில் கடந்த 14 ஆம் தேதி முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை வண்ணாரபேட்டையில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வற்புறுத்தியதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.
இந்த தடியடி சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் இன்று 4-வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
Chennai: People continue to hold protest against the Citizenship Amendment Act (CAA) and National Register of Citizens (NRC) at Old Washermanpet. #TamilNadu pic.twitter.com/n27ytPD5Za
— ANI (@ANI) February 16, 2020