CPR முதலுதவி செய்து மாணவர் உயிரை காப்பாற்றிய நர்ஸ்! குவியும் பாராட்டு…

விபத்தில் சிக்கிய மாணவரின் இதயத்தை செயல்பட வைத்த செவிலியரின் முதலுதவி... குவியும் பாராட்டுக்கள்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 4, 2021, 09:13 AM IST
  • விபத்தில் சிக்கிய மாணவர்
  • செவிலியர் முதலுதவி
  • உயிர் கொடுத்த நர்ஸ்
CPR முதலுதவி செய்து மாணவர் உயிரை காப்பாற்றிய நர்ஸ்! குவியும் பாராட்டு…  title=

மன்னார்குடி அருகே விபத்தில் சிக்கி, மூச்சு பேச்சின்றி கிடந்த மாணவரின் இதயத்தை செயல்பட வைத்த செவிலியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கருவாக்குறிச்சியைச் சேர்ந்தவர் வசந்த். 18 வயது இளைஞரான வசந்த் பாலிடெக்னிக் இறுதியாண்டு படித்து வருகிறார். நேற்று லக்னாம்பேட்டை என்ற கிராமத்தில் இரு சக்கர வாகனத்தில் வரும்போது செம்மறி ஆடுகள் மீது மோதி கீழே விழுந்ததில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்துள்ளார்.

முதலுதவி
அவ்வழியாக காரில் வந்துக் கொண்டிருந்தார் வனஜா என்ற செவிலியர். மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த செவிலியரான வனஜா, சம்பவ இடத்தை கடக்கும்போது மயங்கி கீழே கிடந்த வசந்தை பார்த்தார். உடனே அவர் காரில் இருந்து இறங்கி, வசந்தை பரிசோதித்து பார்த்துள்ளார். 

மாணவர்
அவரது இதயம் செயல்படாததை அறிந்து, அவசர கால முதலுதவியாக இதய பகுதியை கைகளால் மசாஜ் கொடுக்கும் CPR எனப்படும் முதலுதவி சிகிச்சை செய்ததில் ரத்த ஓட்டம் சீராகி மாணவரின் இதயம் மீண்டும் செயல்பட துவங்கியது.

சிபிஆர்

உடனடியாக மாணவருக்கு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவர் உயிரை காப்பாற்றிய செவிலியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

ALSO READ | விபத்தில் ஆட்டோ ஓட்டுனர் பலி : பஸ்ஸை கொளுத்திய மக்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News