வரும் மார்ச் 16., முதல் புதுவை திரையரங்கங்கள் மூடல்!

புதுவை மாநில அரசின் 25% கேளிக்கை வரியை ரத்து செய்யகோரி வரும் மார்ச் 16 ஆம் நாள் புதுவை திரையரங்கங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

Updated: Mar 14, 2018, 07:39 PM IST
வரும் மார்ச் 16., முதல் புதுவை திரையரங்கங்கள் மூடல்!
Representational Image

புதுச்சேரி: புதுவை மாநில அரசின் 25% கேளிக்கை வரியை ரத்து செய்யகோரி வரும் மார்ச் 16 ஆம் நாள் புதுவை திரையரங்கங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

இதுகுறித்து புதுவை சினிமா தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் லக்கி பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...

புதுவை திரையரங்குகளில் வசூளிக்கப்படும் திரைப்பட டிக்கெட் விலையில் 25% கேளிக்கை வரியாக (01.07.2017 வரை) செலுத்தப் பட்டு வந்தது. பின்னர் மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி அமலான பிறகு, மத்திய அரசின் GST கேளிக்கை வரி 28% மற்றும் மாநில அரசுக்கு 25% என ஆக மொத்தம் 53% வரி செலுத்தி வருகின்றோம்.

இத்தகு வரி சுமையினை ஏற்க வினியோகஸ்தர்கள் மறுத்து வருகின்றனர். எனவே வரி சுமையினை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளனர். எனவே புதுவை அரசு மூலம் வசூளிக்கப்படும் (மாநில அரசின் கேளிக்கை வரி) 25% வரியினை ரத்து செய்ய வேண்டும் என தியேட்டர் உரிமையாளர் சங்கம் சார்பில், மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த கோரிக்கை நிறைவேற்றும் வரை, வரும் 16-ம் நாள் துவங்கி புதுவையில் உள்ள 12 திரையரங்கங்களும் மூடப்படும் என தெரிவித்துள்ளார்!