தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே இலங்கைக்கு அருகே வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுசேரியில் அடுத்த இரு தினங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், சென்னையிலும் மிதமான மழை பெய்யும் என்று கூறியுள்ளது. மேலும் தென் தமிழகமான கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வரும் 18-ம் தேதி வரை மழை நீடிக்கும் என குறிப்பிட்டுள்ளது.