மத்திய அரசை குறை கூறாத ரஜினிகாந்த்-சீமான் காட்டம்!

ரஜினிகாந்த் வருமானவரித்துறைக்காக மத்திய அரசை குறை கூறாமல் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்கிறார் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Updated: Feb 9, 2018, 05:08 PM IST
மத்திய அரசை குறை கூறாத ரஜினிகாந்த்-சீமான் காட்டம்!

ரஜினிகாந்த் வருமானவரித்துறைக்கு பயந்தே மத்திய அரசை குறை கூறாமல் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்கிறார் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டியுள்ளது என்றார்.

மேலும், கமல் ஹாசனும் நானும் சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு உண்மையில் காலம்தான் பதில் சொல்லும். எங்கள் இருவரின் கொள்கை ஒன்றாக பொருந்துகிறதா என பார்க்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து சென்னையில் கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில், தற்போது இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சீமான் ரஜினிகாந்த் வருமானவரித்துறைக்கு பயந்தே மத்திய அரசை குறை கூறாமல் தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்கிறார் என்று தெரிவித்துள்ளார்.