ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த், நவம்பர் 30 ஆம் தேதி (நாளை) ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை காலை ரஜினிகாந்த் ஆலோசனை நடத்த உள்ளார்.
அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினிகாந்த் (Rajinikanth) இறுதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக தொலைப்பேசி வாயிலாக அனைத்து நிர்வாகிகளுக்கும் ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. கட்சி தொடங்குவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவு என ஏற்கனவே ரஜினி கூறியிருந்தார். தற்போது, நாளை ஆலோசனை நடத்த உள்ளது அரசியல் (Political) வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ALSO READ | மு.க. அழகிரி மற்றும் நடிகர் ரஜினியை சந்திக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷா?
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என 3 வருடமாக தெரிவித்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வரவுள்ளதாக ரசிகர்கள் முன்பு அறிவித்தார் ரஜினிகாந்த். அவரது அறிவிப்புக்கு பிறகு நாடாளுமன்ற (Parliament) தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 20 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்து விட்டது.
ALSO READ | ரஜினி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தனுஷ்; இவர்தான் இயக்குனர்!
1996ஆம் ஆண்டு முதலே ரஜினியை (Rajini Makkal Mandram) அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கின்றனர். ரஜினிதான் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்காமலேயே இருந்தார்.
இந்நிலையில் தற்போது சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது.
கொரோனா காலத்தில் மக்களை சந்திப்பதை தவிர்க்குமாறு, ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கடிதம் ஒன்று அண்மையில் வெளியானது. தனது பெயரில் வந்த அறிக்கை உண்மையல்ல, மருத்துவ தகவல்கள் மட்டுமே உண்மை என ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில் 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்றும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | வருவாரா? வரமாட்டாரா? கசிந்தது கடிதம் -விளக்கம் அளித்த ரஜினிகாந்த்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3lo