வருவாரா? வரமாட்டாரா? கசிந்தது கடிதம் -விளக்கம் அளித்த ரஜினிகாந்த்!!

அரசியல் திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்வதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். "வெளியே கசிந்த கடிதம்" எனது இல்லை என விளக்கம் அளித்துள்ளார். 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 29, 2020, 02:34 PM IST
  • அரசியல் திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்வதாக ரஜினிகாந்த் அறிவிப்பு.
  • சரியான நேரத்தில் எனது அரசியல் நிலைப்பாடு குறித்து மக்களுக்கு அறிவிப்பேன்.
  • கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்தும், நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை இன்னும் ஆரம்பிக்கவில்லை
வருவாரா? வரமாட்டாரா? கசிந்தது கடிதம் -விளக்கம் அளித்த ரஜினிகாந்த்!! title=

சென்னை: அரசியலில் சேருவது குறித்து மறுபரிசீலனை செய்வதை நடிகர் ரஜினிகாந்த் இன்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்த் தரப்பில் வெளியிடப்பட்டது போலவே ஒரு அறிக்கை பரவியது. அந்த கடிதம் குறித்து ட்வீட் செய்த நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) "கடிதம் என்னுடையது அல்ல" என விளக்கம் அளித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் எழுதியதாக சமூக ஊடகங்களில் பரவிய ஒரு வைரல் செய்தியின் அடிப்படையில், அவர் உடல்நலம் காரணமாக, அரசியலுக்குள் வரமாட்டேன்" என்று கூறியதாக செய்திகள் பரவியது. இது ரசிகர்கள் மற்றும் அவரது விமர்சகர்களிடையே பெரும் விவாதத்திற்கு வழிவகுத்தது. 

 

இதனையடுத்து அந்த கடிதம் குறித்து, நடிகர் ரஜினிகாந்த் "அது உண்மை இல்லை" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

ALSO READ | ‘இப்ப இல்லனா, எப்பவுமே இல்லை’: ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்களின் சுவரொட்டிகள்!!

தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “அறிக்கை” போலியானது என்றாலும், அவரது உடல்நிலை குறித்து கூறப்பட்டவை உண்மை என்று கூறியுள்ளார். “எனது அறிக்கையாகத் தோன்றும் ஒரு கடிதம் சமூக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் வைரலாகப் பகிரப்படுகிறது. அது எனது அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆயினும்கூட, எனது உடல்நலம் மற்றும் எனது மருத்துவர் எனக்கு வழங்கிய அறிவுரைகள் அனைத்தும் உண்மைதான். எனது "ரஜினி மக்கள் மன்றம்" (Rajini Makkal Mandram) உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் சரியான நேரத்தில் எனது அரசியல் நிலைப்பாடு குறித்து மக்களுக்கு ஒரு அறிவிப்பை வெளியிடுவேன்” என்று தனது ட்விட்டர் (Rajinikanth Twitter) பக்கத்தில் நடிகர் விளக்கம் அளித்துள்ளார்.

 

டிசம்பர் 2017 இல், ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் சென்னையில் தனக்கு சொந்தமான திருமண மண்டபமான ராகவேந்திர கல்யாண மண்டபத்தில் ஆலோசனை செய்த பிறகு, அரசியலில் நுழைவது குறித்து மிகவும் வியத்தகு அறிவிப்பை வெளியிட்டார். அந்த நேரத்தில் ரஜினியின் அரசியல் நுழைவு குறித்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில் கடந்த 20 வருடங்களாக, அரசியலுக்கு வருவேன்.. வருவேன்.. எனக்கூறிக்கொண்டு இருந்த நடிகர், தனது அரசியல் பிரவேசம் குறித்து முடிவை அறிவித்ததால் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.

ஆயினும்கூட, கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்தும், நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியை இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், தற்போது ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், ரஜியின் விளக்கம் அவரது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. 

ALSO READ | விமர்சகர்களுக்கு முற்றுபுள்ளி வைத்த நடிகர் ரஜினிகாந்த்... பத்து முக்கிய தகவல்கள்

தற்போது "அண்ணாத்த" (Annaatthe) படத்தில் இயக்குனர் சிவாவுடன் இணைந்து பணியாற்றி வரும் நடிகர் ரஜினி, இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​2021 ல் வரவிருக்கும் மாநிலத் தேர்தலில் தனது கட்சி போட்டியிட்டாலும், அவர் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று கூறினார். 

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News