IMD Weather Report: தமிழ் நாட்டில் நிவார் சூறாவளிக்குப் பின்னர், தென் இந்தியா மக்கள் மீண்டும் பலத்த மழையை எதிர்கொள்ள இருக்கிறார்கள். இந்திய வானிலை ஆய்வுத் மையத்தின் சமீபத்திய அறிவிப்பின்படி, அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு (Tamil Nadu), புதுச்சேரி (Puducherry), கேரளா (Kerala) மற்றும் கடலோர ஆந்திரா (Andhra Pradesh) ஆகிய மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என எதிர் பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதுகாப்பை மனதில் கொண்டு, சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது (Safety Measures in Tamil Nadu):
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (India Meteorological Department) கருத்துப்படி, வங்காள விரிகுடாவில் குறிப்பிடத்தக்க குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக, தென் இந்தியாவின் பல பகுதியில் பலத்த மழை பெய்யக்கூடும். பாதுகாப்பு கருதி 200-க்கும் மேற்பட்ட மீனவர்களை திரும்பி கரைக்கு வருமாறு தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் (Minister D. Jayakumar) தெரிவித்துள்ளார். இந்த மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடித்தலில் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கு உதவி செய்ய கடலோர காவல்படையும் (Coast Guard) ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 218 படகுகளில் எட்டு படகு பாதுகாப்பாக கரைக்கு திரும்பியுள்ளன.
ALSO READ | தமிழகத்தை நோக்கி நகரும் மற்றொரு புயல்... டிச.,2 ஆம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கை!!
கேரளா, கர்நாடகா, கோவா மற்றும் லட்சத்தீவிடம் உதவி கோரப்பட்டுள்ளது (Help from Kerala, Karnataka, Goa and Lakshadweep):
கேரளா (Kerala), கர்நாடகா (Karnataka), கோவா (Goa) மற்றும் லட்சத்தீவுகளில் (Lakshadweep) உள்ள அதிகாரிகளிடமிருந்து தமிழக படகுகளை தங்களது மீன்பிடி துறைமுகத்தில் அனுமதித்து உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் (Minister D. Jayakumar) தெரிவித்தார். தென் கிழக்கு வங்கக்கடலில் (South East Bay of Bengal) தெற்கு அந்தமான் கடல் (South Andaman Sea) அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி சனிக்கிழமையன்று உருவானது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தென் தமிழக கடற்கரையை டிசம்பர் 2 ஆம் தேதியில் அடைய வாய்ப்புள்ளது.
Kindly download MAUSAM APP for location specific forecast & warning, MEGHDOOT APP for Agromet advisory and DAMINI APP for Lightning Warning & visit state MC/RMC website
for district wise warning.@ndmaindia pic.twitter.com/wooSypxkjL— India Meteorological Department (@Indiametdept) November 30, 2020
மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை (Thunder Showers):
IMD செய்திகளின்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் (Karaikal) இலேசான முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். தமிழகம் உட்பட அண்டை மாநிலங்களில் டிசம்பர் 3 வரையும், மற்றும் தமிழகத்தின் அருகில் உள்ள யூனியன் பிரதேசத்தில் டிசம்பர் 1 வரை மழை தொடரக்கூடும். அடுத்த நான்கு நாட்களில், பெரும்பாலான பகுதிகளில் படிப்படியாக மழை பெய்யத் தொடங்கும் என்று IMD புல்லட்டின் கூறுகிறது.
தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் கனமழை முதல் அதிக மழை பெய்யும் (Heavy Rainfall in Tamil Nadu):
டிசம்பர் 1 ம் தேதி, திருநெல்வேலி (Tirunelveli), தூத்துக்குடி (Tuticorin) மற்றும் கன்னியாகுமரி (Kanyakumari) உட்பட கடலோர மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த நாள், ராமநாதபுரம் (Ramanathapuram) உள்ளிட்ட தெற்கு மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Depression over southeast Bay and adjoining southwest Bay of Bengal & neighbourhood(Pre-Cyclone Watch for South Tamilnadu and South Kerala coasts) moved moved westwards with a speed of 7 kmph during past six hours and lay centered at 1730 hrs IST of today.https://t.co/QSfsJn8fMK pic.twitter.com/ewEFmn8mzH
— India Meteorological Department (@Indiametdept) November 30, 2020
சிவப்பு மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை ( Issued Red and Orange Alerts):
கேரளாவில் உள்ள இடுக்கி (Idukki) மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுத்துள்ளது. அதே நேரத்தில் திருவனந்தபுரம் (Thiruvananthapuram) மற்றும் கொல்லத்திற்கு (Kollam) ஆரஞ்சு எச்சரிக்கை (Orange Alert) விடுக்கப்பட்டுள்ளது. இங்கு மீனவர்கள் கடலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30 நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா (Pathanamthitta) மாவட்டங்களுக்கு டிசம்பர் 2 ஆம் தேதி ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில் ஆலப்புழா (Alappuzha), கோட்டயம் (Kottayam) மற்றும் எர்ணாகுளம் (Ernakulam) மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை (Yellow Alert) விடுக்கப்பட்டுள்ளது.
ALSO READ | கஜா, நிவர் உட்பட தமிழகத்தை தாக்கிய அதிதீவிர புயல்கள் என்னென்ன?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR