ஒகி புயலால் பாதிக்கப்படிந்தவர்களுக்கு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண நிதியுதவியுடன், கூடுதலாக ரூ.6 லட்சம், முதல்–அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்;-
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு,நிவாரண பணிகளை துரிதப்படுத்த ஆய்வுக்கூட்டம் நடத்தினேன். அப்போது என்னிடம் பலர் ‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மீனவர் அல்லாத பிற குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை விடுத்தனர். அவர்களுடைய கோரிகையை ஏற்று,மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பல அறிவிப்புகளையும் வெளியிட்டுளேன் என்று தெரிவித்தார்.