ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்.ரத்னவேல் பாண்டியன் (89) சென்னையில் இன்று காலமானார். நெல்லை மாவட்டம் திருப்புடை மருதூர் கிராமத்தில் பிறந்தவர் எஸ்.ரத்னவேல் பாண்டியன். இவர் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
1988-ம் ஆண்டு முதல் 1994-ம் ஆண்டு வரை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக எஸ்.ரத்னவேல் பாண்டியன் பணியாற்றியுள்ளார். மேலும் எஸ்.ரத்னவேல் பாண்டியன் அவர்கள், சென்னை ஐகோர்ட் பொறுப்பு நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.