ஆர்.கே.நகர் தேர்தல்: மக்கள் குறைகளை தீர்க்க அதிமுகவின் புதிய இணையதளம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிய அதிமுக ஒரு புதிய இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது.

Last Updated : Dec 14, 2017, 02:54 PM IST
ஆர்.கே.நகர் தேர்தல்: மக்கள் குறைகளை தீர்க்க அதிமுகவின் புதிய இணையதளம் title=

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொகுதி மக்களின் குறைகளைக் கேட்டறிய அதிமுக ஒரு புதிய இணையதளம் தொடங்கப்பட்டிருக்கிறது.

முன்னாள் முதல்வர் ஜெ., மறைவுக்கு பின்னர் காலியான ஆர்.கே.நகர் தொகுதி காலியானதையடுத்து பல்வேறு சர்சரவுகளுக்கு பிரகு தற்போது இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

வரும் டிசம்பர் 21-ம் நாள் இந்த இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பு சூடுபிடிக்க துவங்கியுள்ளது.இந்த இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனனும், சசிகலா அணி சார்பில் டிடிவி, திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிடுகின்றனர். மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவிற்கு ஆதரவளிப்பதாக முன்னதாகவே அறிவித்துவிட்டன.

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் அதிமுக தொழில்நுட்பப் பிரிவு சார்பில் http://www.rknagar.in/ என்ற இணையதளத்தை இவர்கள் இருவரும் இணைந்து தொடங்கி வைத்தனர்.

 

 

Trending News