தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு தான் கிடைக்கும். 92% பொதுக்குழு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இந்த பக்கம் தான் உள்ளனர். மோடி இருக்கும் வரை அதிமுக.,வை யாராலும் அசைக்கவே முடியாது. அதனால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
ஒபாமா வந்தாலும் சரி, டிரம்ப்பே வந்தாலும் சரி, மோடி இருக்கையில் வேறு எந்த பேடியாலும் ஒன்றும் செய்து விட முடியாது. நம்மை எதிர்ப்பதற்கு யாருமே இல்லை. மோடியின் ஆதரவு இருப்பதால் இரட்டை இலை சின்னம் நமக்கு தான் கிடைக்க்கும்.
இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல் உள்ளிட்டவைகள் நடக்கும். நம்பிக்கை ஒட்டெடுப்பு நடத்தினால் தெரியும் யாரிடம் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர் என்று. இவ்வாறு அவர் பேசினார்.