ALERT! சேலம் ரயில் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து!

Cancelled Train List: பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து. ரத்து செய்யப்பட்ட ரயில் குறித்து விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 28, 2022, 07:18 PM IST
ALERT! சேலம் ரயில் நிலையத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக சில ரயில்கள் ரத்து! title=

Salem Division Cancelled Train List: சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே பயணிகள் ரத்து செய்யப்பட்ட ரயில் குறித்து விவரங்களை தயவுசெய்து அறிந்துக்கொள்ளுங்கள் என தெற்கு ரயில்வேவுக்கு உட்பட்ட சேலம் கோட்டம் (Salem DRM) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட ரயில்களின் விவரங்கள்:

சென்னை எழும்பூர்-சேலம் சந்திப்பு - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

1. ரயில் எண்.22153 சென்னை எழும்பூர் - சேலம் ஜங்ஷன் எக்ஸ்பிரஸ், 30.11.2022, 01.12.2022, 02.12.2022 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து 23.55 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் 06.10 மணிக்கு சேலம் சென்றைடையும் ரயில் ரத்து செய்யப்படும்.

2. 01.12.2022, 02.12.2022, 03.12.2022 ஆகிய தேதிகளில் சேலத்தில் இருந்து 21.30 மணிக்கு புறப்படும் ரயில் எண் 22154 சேலம் ஜங்ஷன் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படும்.

03.12.2022 அன்று ரத்து செய்யப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம்: 

1. ரயில் எண்.12680 கோயம்புத்தூர் ஜங்ஷன்  - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், 03.12.2022 அன்று 06.15 மணிக்கு கோயம்புத்தூர் ஜூனில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டது.

2. 03.12.2022 அன்று 14.30 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் எண்.12679 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் ஜங்ஷன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (Intercity Express) முழுமையாக ரத்து செய்யப்படும்.

3. 03.12.2022 அன்று 06.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் எண்.12675 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் ஜங்ஷன் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படும்.

4. 03.12.2022 அன்று 15.15 மணிக்கு கோயம்புத்தூர் ஜங்ஷனில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் எண்.12676 கோயம்புத்தூர் ஜங்ஷன் - சென்னை சென்ட்ரல் செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் (Kovai Express) முழுமையாக ரத்து செய்யப்படும்.

5. 03.12.2022 அன்று காலை 07.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் ரயில் எண்.12243 சென்னை சென்ட்ரல் - கோயம்புத்தூர் ஜங்ஷன் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ் (Shatabdi Express) முழுமையாக ரத்து செய்யப்படும்.

6. ரயில் எண்.12244 கோயம்புத்தூர் ஜங்ஷன் - சென்னை சென்ட்ரல் செல்லும் சதாப்தி எக்ஸ்பிரஸ், 03.12.2022 அன்று 15.05 மணிக்கு கோயம்புத்தூர் ஜங்ஷனில்  இருந்து புறப்படும் ரயில் ரத்து.

7. ரயில் எண்.22666 கோயம்புத்தூர் ஜங்ஷன் - கே.எஸ்.ஆர் பெங்களூரு செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் (UDAY Express) 03.12.2022 அன்று 05.45 மணிக்கு கோயம்புத்தூர் ஜங்ஷனில் இருந்து புறப்படும் ரயில் ரத்து செய்யப்பட்டது. 

8. ரயில் எண்.22665 கே.எஸ்.ஆர் பெங்களூரு (KSR Bengaluru)  - கோயம்புத்தூர் ஜங்ஷன் செல்லும் உதய் எக்ஸ்பிரஸ், 03.12.2022 அன்று 14.15 மணிக்கு KSR பெங்களூரில் இருந்து புறப்படும் ரயில் ரத்து செய்யப்படும்.

9. ரயில் எண்.12677 KSR பெங்களூரு - எர்ணாகுளம் ஜங்ஷன்  எக்ஸ்பிரஸ், 03.12.2022 அன்று 06.10 மணிக்கு KSR பெங்களூரில் இருந்து புறப்படும் ரயில் ரத்து செய்யப்படும்.

10. ரயில் எண்.12678 எர்ணாகுளம் ஜங்ஷன் (Ernakulam Jn)  - கேஎஸ்ஆர் செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ், 03.12.2022 அன்று 09.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும் ரயில் ரத்து செய்யப்படும்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News