TN Lok Sabha Elections 2024 : கடந்த சில நாட்களுக்கு முன்னர் மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். மக்களவை தேர்தல் தேதிகள் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும் இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும். நாடு முழுவதும் 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெறும். இதில் முதல் கட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதியிலேயே விளவங்கோடு இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் 2024 நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காட்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே காரில் வந்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த சுலோச்சனா தேவி (47) என்பவர் ரூ.3.84 லட்சம் பணத்தை உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்தது தெரிந்தது. பின்னர் மொத்த பணத்தையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் இது சீல் வைக்கப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோல காட்பாடி தொகுதிக்குட்பட்ட பிரம்மபுரம் பகுதியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது காரில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த பொன்னை புதூர் பகுதியை சேர்ந்த இளவரசன் என்பவரிடம் இருந்து 65 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது கிருஷ்ணகிரிக்கு சிகிச்சைக்காக செல்வதாக கூறப்படுகிறது.
இதேபோல பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் மாட்டு வியாபாரியிடம் உரிய ஆவணம் இல்லாத 5 லட்சத்து 80 ஆயிரத்தை நிலைய கண்காணிப்பு குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். அந்த வகையில் இன்று காலை முதல் தற்போது வரைக்கும் வேலூர் மாவட்டத்தில்தேர்தல் பறக்கும் படையினரால்10 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ