எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்கள் கைது!!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!!

Last Updated : Apr 5, 2019, 09:29 AM IST
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்கள் கைது!!

நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை!!

எல்லை தாண்டி மீன்பிடித்தாக தமிழக மீனவர்கள் 18 பேர் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்த மூன்று விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 
 
நெடுந்தீவு அருகே  மீன் பிடித்து கொண்டிருந்த  18 மீனவர்களையும் மூன்று படகுகளையும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து  காங்கேசன்துறைகடற்படை முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரனைக்கு பின்னர் மீனவர்களை யாழ்பாணம் மீன் வளத்துறை அமிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு பின் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.

More Stories

Trending News