அடுப்பில் கருகிய பாத்திரங்களை பளபளக்க வைக்க சூப்பரான டிப்ஸ்..!

அடுப்பில் வைத்த பாத்திரங்கள் எல்லாம் அடிப்பிடித்து கருகியிருந்தால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே அதனை பளபளப்பாக்கலாம்

 

கருகிய பாத்திரங்களை கடையில் இருந்து வாங்கி வந்ததுபோல் பளபளப்பாக்க வேண்டும் என்றால் இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.

 

1 /7

வீட்டில் இருக்கும் பாத்திரங்கள் எல்லாம் மிகவும் கருகியிருந்து கறிப்பிடித்து இருந்தால் அவற்றை சுத்தம் செய்ய கொக்கோ கோலா, பெப்ஸி போன்ற குளிர்பானங்களை பயன்படுத்தலாம். கருகிய பாத்திரத்தில் இந்த பானங்களை ஊற்றி கொதிக்க வைத்தால் போதும். உள்பக்கம் இருந்த கறி எல்லாம் சுத்தமாக வந்துவிடும்.

2 /7

வெளிப்புறத்தில் கறிப்பிடித்திருக்கும் பாத்திரத்துக்கு சமையல் சோடாவை வழக்கமாக பாத்திரங்கள் கழுவும் சோப்புடன் சேர்த்து சுத்தமாக அழுத்தி தேய்க்கவும். பாத்திரத்தில் இருக்கும் கறியெல்லாம் சுத்தமாக வந்துவிடும். 

3 /7

பேக்கிங் சோடாவை வாங்கி வந்து தண்ணீரில் கலக்கி ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். அதைக் கொண்டு கறி பிடித்த பாத்திரத்தை சுத்தமாக அழுத்தி தேய்க்கவும். பின்னர் 15 முதல் 20 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். அதன்பின்னர் பாத்திரத்தை எடுத்து கழுவினால் பளபளப்பாக இருக்கும்.

4 /7

பாத்திரத்தின் உள் பக்கத்தில் தீய்ந்து இருந்தால், தண்ணீருடன் சேர்த்து வினிகரை கலந்து இரவு முழுவதும் ஊற வைக்கவும். அதன்பின்னர் காலையில் எழுந்து வழக்கும்போல் சோப்பு போட்டு தேய்த்து கழுவினால் பாத்திரத்தின் கறி எல்லாம் சுத்தமாக வந்து பளபளப்பாக இருக்கும்.

5 /7

அடி பிடித்து தீய்ந்து இருக்கும் பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வெங்காயத் தோலை போட்டு வேகமாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் டிஷ் சோப்பு போட்டு தேய்த்தால் பாத்திரத்தில் அடிப்பிடித்த கறியெல்லாம் சுத்தமாக வந்து பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.

6 /7

தீய்ந்த பாத்திரத்தில் தக்காளி சாஸை ஊற்றி இரவு முழுவதும் ஊற வையுங்கள். காலையில் அந்த பாத்திரத்தை வழக்கம்போல் சோப்பு போட்டு கழுவினால் பாத்திரம் பளபளப்பாக மாறிவிடும். 

7 /7

நான் ஸ்டிக் பாத்திரங்களில் அடிப்பிடித்து தீய்ந்து இருந்தால் எலுமிச்சை போட்டு நன்றாக தேய்த்து சிறிது நேரம் விட்டுவிடுங்கள். அதன்பிறகு தண்ணீரை உற்றி கழுவினால் பாத்திரம் பளபளப்பாக மாறிவிடும்.