பட்ஜெட் 2024 எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா? இல்லை ஏமாற்றமா? நிதியமைச்சரின் அறிவிப்புகள்...

Budget 2024 Announcements Of FM Nirmala : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆண்டு பட்ஜெட்டில், நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் இவை...

தேர்தலில் ஆளும்கட்சியை ஓரம் கட்டிய ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக ₹15,000 கோடி ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிப்பு
வெளியாகியுள்ளது. பிரதமரின் இலவச உணவு வழங்கும் கரீப் கல்யாண் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது

1 /8

பிரதமர் மோடி 3.O என்றும், மீண்டும் மோடி ஆட்சியை கொண்டு வந்ததற்காக நாட்டு மக்களுக்கு நன்றி கூறிய பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை தொடங்கினார்.  அதன்பிறகு பீகாருக்கு நிர்மலா சீதாராமன் ஒரு பெரிய பரிசை வழங்கினார், பாட்னா-பூர்னியா எக்ஸ்பிரஸ்வே ஒப்புதல், புதிய விமான நிலையங்கள் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும். 

2 /8

பணிபுரியும் பெண்களுக்காக சிறப்பு தங்கும் விடுதியை மத்திய அரசு கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு

3 /8

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி புதிய இலவச வீடுகள் கட்டப்படும் என நிதியமைச்சரின் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டது

4 /8

உற்பத்தித் துறையில் புதிதாக வேலைக்கு சேருவோருக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

5 /8

2024-25 நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9% என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும், பற்றாக்குறையை 4.5%க்கும் கீழ் எட்டுவதே இலக்கு என்றும் நிதியமைச்சர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

6 /8

நாகரீகத்தின் ஒரு பகுதி சுற்றுலா என நிதியமைச்சர் தெரிவித்தார். இந்தியாவை சர்வதேச சுற்றுலா மையமாக மாற்றுவது மத்திய அரசின் நோக்கம் என்று கூறிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுற்றுலாத்துறையானது, வேலை வாய்ப்புகளை பல துறைகளில் உருவாக்கும் என்று தெரிவித்தார். கயாவில் உள்ள விஷ்ணுபத் கோவில் மற்றும் புத்தகயாவில் மகாபோதி கோவில் ஆகியவற்றை கட்டுவது, இயற்கை அழகு, கோயில்கள், கைவினைத்திறன், இயற்கை நிலப்பரப்புகள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் அழகிய கடற்கரைகள் ஆகியவை சுற்றுலாவை மேம்படுத்தும் என்று தெரிவித்தார்

7 /8

வேளாண்துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

8 /8

கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் துறைக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதியை இந்த ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கீடு செய்து அறிவித்தார். மேலும் உள்நாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்காக ₹10 லட்சம் வரை கடனுக்கான நிதியுதவியை அரசு வழங்கும்