சென்னை: ஞாயிற்றுக்கிழமை இரவு சோமங்கலம் அருகே ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலின் நிருபரை (TV Reporter) அவரது வீட்டின் முன் கொடூரமாக கொலை செய்ததற்காக ஒரு மைனர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழன் டிவியின் நிருபரான ஸ்ரீபெரம்புதூர் அருகே பழைய நல்லூரைச் சேர்ந்த மோசஸ் (26) என்பவரை ஞாயிற்றுக்கிழமை இரவு மூவர் அணுகினர். அப்பகுதியில் உள்ள ஒருவரைப் பற்றி தகவல் கேட்க வந்தகாக் கூறினர். ஆனால் திடீரென்று அவர்கள் அரிவாள்களை எடுத்து மோசஸை தாக்கினர். அழுகையும் கத்தலுமாக ஒலி கேட்க அவரது தந்தையும் சகோதரியும் அண்டை வீட்டாரும் வெளியே ஓடி வந்தனர்.
புது நல்லூருக்குள் எந்த நிருபர் நுழைந்தாலும் அவருக்கு இப்படிதான் நடக்கும் என கூச்சலிட்ட அந்த கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியது. மோசஸ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
ALSO READ: பட்டாசு மீதான தடை.. கேள்விக்குறியாகும் சிவகாசி பட்டாசு ஆலைகளின் நிலை..!!!
ஊடக நிருபரான மோசேயின் தந்தை ஜேசுதாஸ், சோமங்கலம் போலீசில் ஏற்கனவே உள்ளூர் ரவுடிகள் தனது மகனை அச்சுறுத்துவதாக புகார் அளித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. திங்கள்கிழமை காலை, நிருபர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை முன் கூடி, கொலைகாரர்களையும் அவர்களின் பின்னால் இருந்தவர்களையும் கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்குப் பதிவு செய்த சோமங்கலம் போலீசார், பின்னர் நவமணி, விக்னேஷ், வெங்கடேஷ் மற்றும் புது நல்லூரைச் சார்ந்த 17 வயதான ஒருவரையும் திங்கள்கிழமை காலை கைது செய்தனர். இந்தக் குழு தங்களது வட்டாரத்தில் காலியாக உள்ள அரசு இடங்களை விற்பனை செய்வதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அப்பகுதியில் இந்த கும்பல் கஞ்சா விற்பனையில் (Drug sale) ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இவை அனைத்தையும் பற்றி ஆறு மாதங்களுக்கு முன்பு, மோசஸ் புகாரளிக்க முயன்றார். ஆனால் அது வெளியிடப்பட்டால் அவரைக் கொலை செய்வதாக குழு அச்சுறுத்தியது.
சட்டவிரோத நடவடிக்கை குறித்து அரசாங்க அதிகாரிகள் சமீபத்தில் அறிந்ததிலிருந்து, இந்த கும்பல் இதில் மோசஸின் பங்கு இருக்கக்கூடும் என சந்தேகித்து அவரைக் கொன்றது.
இதற்கிடையில் பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு பல்வேறு குழுக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ALSO READ: அழிக்கப்படும் காய்கறிகள்: விளைபொருள் கொள்முதல் வாரியம் அமைக்க வேண்டும்- PMK
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR