சென்னையின் பரபரப்பான ரயில் நிலையங்களில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையமும் ஒன்று. நேற்று இரவு ரயிலில் வந்தவர்கள் சிலர் மின்தூக்கியை பயன்படுத்தி உள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்தூக்கி பாதியில் நின்றதால் அதில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து மின்தூக்கியில் இருந்த உதவி எண்ணுக்கு அழைத்ததின் பேரில் அங்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறை மற்றும் தொழில்நுட்பக்குழுவினர், மின்தூக்கியை இயக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், மின்தூக்கியின் மேல்பகுதியில் இருந்த மின்விசிறியை, உள்ளே இருந்தவர்கள் உதவியுடன் அகற்றினர். பின்னர் கயிறு கட்டி ஒருவர் பின் ஒருவராக தூக்கப்பட்டு சுமார் 2 மணிநேரத்திற்கு பின் மீட்கப்பட்டனர். மின்தூக்கியில் இருந்த ஒன்றரை வயது குழந்தை, 5 பெண்கள் உள்பட 13 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மேலும் படிக்க | ரயிலின் அடியில் சிக்கிய குழந்தையும் தாயும் உயிருடன் மீட்பு!
ரயில் நிலையங்களில் மின்தூக்கியை இயக்க பணியாளர்கள் யாரும் இல்லாததால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதிக எடை காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும், பொதுமக்கள் மின்தூக்கிகளில் உள்ள வழிமுறைகளை பின்பற்றினால் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாது எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இந்த சம்பவத்தை உதாரணமாக எடுத்துக்கொண்டு மற்ற ரயில் நிலையங்களில் மின்தூக்கியை இயக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் படிக்க | ரயில் வண்டிகளில் தீப்பிடிப்பதை நம்மால் தடுக்க முடியுமா?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR