தமிழக SETC பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை..! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

தமிழகத்தில் உள்ள SETC பேருந்துகளில் தொடர்ச்சியாக முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கு 50% கட்டண சலுகை வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 30, 2023, 06:30 AM IST
தமிழக SETC பேருந்துகளில் 50% கட்டணச் சலுகை..! யாருக்கெல்லாம் கிடைக்கும்? title=

தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்து துறை குறித்த பல்வேறு அறிவிப்புகளையும் விளக்கங்களையும் கொடுத்தார். அவர் பேசும்போது, கட்டணமில்லா பேருந்துகளில் 20 மாதங்களில் 256.66 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்துள்ளனர். கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் மகளிருக்கு ரூ.200 முதல் ரூ.1,500 வரை சேமிப்பு கிடைத்துள்ளது என விளக்கம் அளித்தார். 

மேலும் படிக்க | சிக்ஸ் பேக்ஸ் மோகம்... உயிரை பறிகொடுத்த ஜிம் பயிற்சியாளர்... இதையெல்லாம் செய்யவே செய்யாதிங்க!

அப்போது அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்பில், SETC பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, 6-வது முறை பயணம் முதல், 50% கட்டணச் சலுகை என்று கொடுக்கப்படும் என அறிவித்தார். இந்த சலுகை அனைத்து அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளுக்கும் பொருந்தும் எனவும், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பெண்களுக்கு 4 இருக்கைகள் ஒதுக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துளார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. நீண்ட தொலைவு பயணம் மேற்கொள்ளும் மக்கள் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும், அடிக்கடி வெளியூர் செல்பவர்களுக்கும் விரைவு பேருந்து கட்டணங்கள் சுமையாக இருக்கின்றன. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | தயிர் என்றால் புரியாது! தமிழ்நாட்டில் ‘தஹி’ என்றால் புரியும்! அடம் பிடிக்கும் FSSAI

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News