சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

Last Updated : Oct 29, 2018, 11:31 AM IST
சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக் title=

தமிழகம் முழுவதும் உள்ள சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

இந்த போராட்டதின் காரணமாக பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு  சத்துணவு வழங்கப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

வரையறுக்கப்பட்ட ஊதியம், குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் , ஓய்வு பெறும்போது அமைப்பாள ருக்கு ரூ. 5 லட்சம், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ. 3 லட்சம் வழங்க வேண்டும். 20,000 காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுடைய நியாயமான கோரிக்கைளை அரசு நிறைவேற்றும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கடந்த 25-ம் தேதி முதல்  தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். 

இந்நிலையில் அவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் இந்த போராட்டத்தை தமிழக அரசு கண்டுகொள்ளாததால், இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த போராட்டதின் காரணமாக சுமார் 47,000 சத்துணவு மையங்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. 

Trending News