தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) டி20 போட்டி அறிமுகம்:-

Last Updated : Jun 9, 2016, 05:07 PM IST
தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்) டி20 போட்டி அறிமுகம்:- title=

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அமைப்பு `தமிழ்நாடு பிரிமீயர் லீக்` (டி.என்.பி.எல்) என்கிற டி20 போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போட்டிக்கான அணிகள் விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

தென் சென்னை, காஞ்சிபுரம், காரைக்குடி, திண்டுக்கல், திருவள்ளூர், கோவை, மதுரை, தூத்துக்குடி 8 அணிகள் ஆகும். அடுத்த மாதம் அணிகளுக்கான வீரர்கள் பட்டியல் வெளியிடப்படும். மற்ற மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் சேர்க்கப்படுவதை குறித்து பிசிசிஐயுடன் கலந்து ஆலோசித்து பிறகே தெற்விக்கபடும். போட்டிகள் ஸ்டார் டிவியில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் என். சீனிவாசன் அவர்கள் தெறிவித்தார்.

கடந்த 8 சீசன்களிலும் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்த சென்னை சூப்பர் கிங்ஸ், ஐ.பி.எல் ஸ்பாட் ஃபிக்ஸிங் வழக்கில் இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றத்துக்கு உள்ளாகினார்கள். இந்த வருட ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு எந்தவொரு ஆட்டமும் ஒதுக்கப்படவில்லை. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தார்கள்.

எனவே தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தமிழ்நாடு அளவிலான "தமிழ்நாடு பிரிமீயர் லீக்" என்ற டி20 போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Trending News