வங்கக் கடலில் நாளை புதிய புயல் சின்னம் உருவாகும் - வானிலை மையம்

வங்கக்கடலில் புயல் சின்னம் நிலவுவதையொட்டி எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.!

Updated: Nov 5, 2019, 03:53 PM IST
வங்கக் கடலில் நாளை புதிய புயல் சின்னம் உருவாகும் - வானிலை மையம்

வங்கக்கடலில் புயல் சின்னம் நிலவுவதையொட்டி எண்ணூர், புதுச்சேரி, காரைக்கால் நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.!

தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்; நேற்று அந்தமான் கடற்பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்டல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.  இது தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். நாளை (நவ.6 ஆம் தேதி) இது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஒரிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரை பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மண்டபத்தில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்கள் நவம்பர் 5 ஆம் தேதி அந்தமான், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கும்,  நவ. 6,7, 8 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக்கடல் பகுதி வடக்கு ஆந்திர கடற்பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இதை தொடர்ந்து, மூன்று துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நாளை புயல் சின்னம் உருவாவதையொட்டி கடலூர், நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 1 ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், அந்தமான் அருகே வங்கக்கடலில் காற்றழுத்தம் உருவாகி உள்ளதால் ஆழ்கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.