தொடரும் சுர்ஜித் மீட்புப் போராட்டம்... திணறும் மீட்பு இயந்திரங்கள்...

சுமார் 40 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அதை தாண்டி செல்வது கடினமாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிப்பு..!

Last Updated : Oct 28, 2019, 10:06 AM IST
தொடரும் சுர்ஜித் மீட்புப் போராட்டம்... திணறும் மீட்பு இயந்திரங்கள்... title=

சுமார் 40 அடிக்கு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில் அதை தாண்டி செல்வது கடினமாக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவிப்பு..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சுமார் 5.30 மணிக்கு 2 வயது குழந்தை சுர்ஜித் தவறுதலாக தவறி விழுந்தார். அப்பொழுது முதல் தற்போது வரை 58 மணி நேரமாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. நவீன தொழில்நுட்பம் கொண்ட இயந்திரங்கள் எடுத்துவரப்பட்டு மீட்பு பணிகள் நடைப்பெற்று வருகிறது, என்ற போதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் இல்லை. விரைவில் சுர்ஜித்தை மீட்போம் என மீட்பு குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அனைத்து நிலைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்; எதிர்பார்க்காத அளவுக்கு கடினமான பாறைகள் உள்ளன ஐஐடி வல்லுநர்கள், புவியியல் வல்லுநர்கள் மண்பரிசோதனை செய்தனர். அதிகசக்தி கொண்ட எந்திரங்களே திணறும் வகையில் கடின பாறைகள் உள்ளன. திட்டமிட்டபடி 90 அடி குழியை இந்நேரம் தோண்டியிருக்க வேண்டும் என விஜயபாஸ்கர் தெரிவித்தார். 

ஆனால், பாறைகள் மிக மிக கடினமாக இருப்பதால் பணிகள் தாமதமாகின்றன. கிட்டத்தட்ட 40 அடி மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. 
மேற்கொண்டு தோண்டுவதற்கு உபகரணங்கள் திணறும் நிலை உள்ளது. மாற்றுத் திட்டம் குறித்து வல்லுநர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. உச்சபட்ச முயற்சிக்கும் பிறகும் ரிசல்ட் குறைவாகவே உள்ளது. இறுதி முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் உள்ளோம். 

அதிநவீன எந்திரங்களுக்கு சவால் விடும் வகையில் கடின பாறைகள் உள்ளன. இறுதி முடிவெடுத்த பிறகு உங்களுக்கு தெரிவிக்கிறோம். இதுபோன்ற அசாதாரண விபத்துகளை முழுமையாக சமாளிக்கக் கூடிய அதிநவீன உபகரணங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசர அவசியம் ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.  

 

Trending News